Egg Health Benefits: முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா? கெட்டதா?

  • SHARE
  • FOLLOW
Egg Health Benefits: முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா? கெட்டதா?

Egg Health Benefits: கோழி முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் புரதங்கள் மற்றும் கோலின் ஆகியவை நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? முட்டை வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடலாமா அல்லது மஞ்சள் கருவோடு சேர்த்து சாப்பிட வேண்டுமா என்று. இந்த பதிவை படித்து குழப்பத்தில் இருந்து தெளிவோம்.

ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால்

உடலில் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், அது இதயத்தைப் பாதிக்கும். இரத்த நாளங்களில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்ந்தால், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் கடினமாகிறது.

இதையும் படிங்க: இதய ஆரோக்கியத்தை வீட்டிலேயே சரிபார்க்க வேண்டுமா - இந்த 5 எளிய சோதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

அதிக கொலஸ்ட்ராலை எடுத்துக் கொள்ளக் கூடாது

ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களின் கட்டுப்பாடற்ற நுகர்வு இதயத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும். நாம் கடைபிடிக்கும் உணவுமுறை நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கிறது. அதனால்தான் அதிக கொலஸ்ட்ராலைத் தவிர்க்க சில உணவுகளைத் தவிர்க்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் முட்டை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். அதனால்தான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முட்டை தவிர்க்கப்படுகிறது. ஆனால் முட்டை சாப்பிடுவதால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிந்துக் கொள்வோம்.

முட்டை வெள்ளைக் கரு, மஞ்சள் கரு எதை சாப்பிடலாம்?

ஏராளமானோருக்கு ஏற்படும் பொதுவான சந்தேகம் முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடலாமா அல்லது மஞ்சள் கருவோடு சேர்த்து சாப்பிடலாமா என்பதுதான். முட்டையை பொறுத்த வரை முழு முட்டையை சாப்பிடுவது தான் நல்லது. மஞ்சள் கரு தவிர்க்கத் தேவையில்லை. முட்டையின் மஞ்சள் கரு, கொலஸ்ட்ரால் இருப்பதாகக் கருதப்படுகிறது, இது பாஸ்போலிப்பிட்களின் நல்ல மூலமாகும். அதாவது மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு வகையை சேர்ந்ததாகும்.

முட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

கோழி முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள், புரதங்கள் மற்றும் கோலின் ஆகியவற்றின் தொகுப்பாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டை சாப்பிடுவதால் 70-80 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 190 கிராம் கொலஸ்ட்ரால் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் அரிய உப்புகளுடன் பாஸ்பரஸ், அயோடின், செலினியம், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை அனைத்தும் உடலுக்கு நல்லது. இருப்பினும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அளவுக்கு மீறினால் நஞ்சுதான்.

தினசரி எத்தனை முட்டை சாப்பிடலாம்?

நமது உடல் நலத்தை சார்ந்து நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு புரதம் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, நீங்கள் நீண்ட நேரம் பசியை உணர மாட்டீர்கள். ஒரு ஆரோக்கியமான நபர் தினமும் 2 முட்டைகளை சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: இதய அடைப்பின் 5 அறிகுறிகள்: பெண்களே உஷார்!!

இதய நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?

இதய நோயாளிகள் வாரத்திற்கு 7 முட்டைகள் அதாவது தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் சாப்பிட முயற்சி செய்யுங்கள். இது கொலஸ்ட்ராலை தடுக்கிறது. மஞ்சள் கருவில் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றாலும் இதய நோயாளிகளுக்கு கொழுப்பு உணவுகள் தேவையில்லை. முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு புரதம் கிடைக்கும். முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட வேண்டாம்.

image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்